படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா 'தசை அழற்சி' நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் உடல்நிலை காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கிறது.
தீவிர சிகிச்சையில் இருக்கும் சமந்தா சில மாதங்களில் மீண்டு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினரும் காத்திருக்கிறார்கள். ஆனால், எதிர்பார்த்ததை விட சமந்தாவின் சிகிச்சைக்கான காலம் கொஞ்சம் நீட்டிக்கப்பட்டுள்ளதாம். அதனால், படக்குழுவிடம் இன்னும் சில மாதங்கள் 'டைம்' கேட்டிருக்கிறார் சமந்தா. படக்குழுவும் அதற்கு சம்மதித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே, 'லைகர்' படத்தின் படுதோல்வியால் தவித்து வரும் விஜய் தேவரகொண்டா 'குஷி' படம் மீது அதிக நம்பிக்கையில் இருக்கிறாராம். இப்போது அதுவும் தாமதமாகிறது என்பது வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல். தெலுங்கில் நானி நடித்த 'ஜெர்சி' படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா உடல்நலம் தேறி வந்த பிறகு 'குஷி' படத்திலும் சேர்ந்து நடிப்பார் என்கிறார்கள்.