துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழக முதல்வரின் மகனும் சமீபத்தில் அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் திரைப்படத் தொழிலில் ஈடபட்டு வந்தார். அந்த நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இதுவரையிலும் 'உதயநிதி ஸ்டாலின் வழங்கும்' என்று அனைத்து விளம்பரங்களிலும் கண்டிப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்நிறுவனம் கடைசியாகத் தயாரித்த 'கலகத் தலைவன்' படம், மற்றும் வெளியிட்ட 'கட்டா குஸ்தி' படம் ஆகியவற்றிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின் அனைத்து விளம்பரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு 'உதயநிதி ஸ்டாலின் வழங்கும்' என்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது 'கட்டா குஸ்தி' விளம்பரங்களிலும், அடுத்து அந்நிறுவனம் வெளியிட உள்ள 'செம்பி' படத்தின் போஸ்டர்களிலும் இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து படங்களைத் தயாரிக்குமா, அல்லது வினியோகம் செய்வதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளுமா என்பது பற்றிய பேச்சுக்கள் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் எழுந்துள்ளது.