2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான படம் சிரித்து வாழ வேண்டும். எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். எம்.என்.நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரிவேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். 'உலகம் என்னும்... என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்கள். 'எண்ணத்தில் நலமிருந்தால்.. மற்றும் 'ஒன்றே சொல்வான் நன்றே செய்வான், பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ என்ற பாடல்களும் இடம்பெற்ற படம். தற்போது இந்த படம் நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வெர்சன் எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 17ம் தேதியன்று வெளியாகிறது.