மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அண்ணன் வழி வாரிசு ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்ஜிஆர் தற்போது நடித்து வரும் படம் இரும்பன். இந்த படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை கீரா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது ஒரு நரிக்குறவ சமுதாய இளைஞனுக்கும், ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்குமான காதல் கதை. பெண்ணை சந்நியாசியாக்க அவரது குடும்பத்தினர் முயற்சிப்பதால் அவளை அந்தமான் அழைத்துச் செல்லும் ஹீரோ, அங்கு அவருக்கு வாழ்க்கையை புரிய வைப்பதுதான் படத்தின் கதை.
அந்தமான் கடல் பகுதியில் கிட்டத்தட்ட நடு கடலில் படப்பிடிப்பு நடத்தினோம். நடு கடலில் அவர் தற்கொலை செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நாயகி கடலில் குதித்தார். அவர் இடுப்பில் ரோப் கட்டப்பட்டிருந்தாலும் அலையின் வேகத்தால் படகு ஒரு திசைக்கும், அவர் ஒரு திசைக்குமாக தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த ஜூனியர் எம்.ஜி.ஆர் கடலில் குதித்து நாயகியை காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறோம். என்றார்.