மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? |

துவாரகா புரொடக்ஷன் சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கும் படம் கொடுவா. நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில் உருவாகி வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் கதை களத்துடன் உருவாகியுள்ளது.
நிதின் சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் அவரது காதலியாக நடித்திருக்கிறார். அவரும் ராமநாதபுரத்து மீனவ பெண்ணாக நடித்திருக்கிறார்.
மாடலாக இருந்த சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். சமூக வலைத்ளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் சம்யுக்தாக இதில் மீனவ பெண்ணாகவே மாறி இருக்கிறார்.