இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழில் சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகை பிரவீணா. மலையாள திரையுலகில் அழகான அம்மா கதாபாத்திரம் என்றால் முதல் சாய்ஸ் இவராகத்தான் இருக்கிறார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மலையாளம் மற்றும் சமீப காலமாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் இவர், கடந்த வருடம் திருநெல்வேலியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மீது சைபர் கிரைம் புகார் அளித்தார். தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவற்றை தன்னை சார்ந்தவர்களுக்கும் மற்றும் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு வருகிறார் என குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாக்கியராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே ஜாமினில் வெளியே வந்த அவர் தற்போது தனது மகள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து தன்னை சேர்ந்தவர்களுக்கு அனுப்பி வைத்து மீண்டும் தன்னுடைய குடும்பத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் என குமுறுகிறார் பிரவீணா.
சமீபத்தில் இவரது மகள், சம்பந்தப்பட்ட பாக்கியராஜ் என்பவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி திருவனந்தபுரம் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஷாஜி கூறும்போது, சம்பந்தப்பட்ட பாக்கியராஜ் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர் என்றும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார். கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தானும் தற்போது தனது மகளும் இப்படி சைபர் தாக்குதலுக்கு ஆளாகி மிகுந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளித்தும் ஒரு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் பிரவீணா.