சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் |
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, கதை நாயகியாக நடித்த ‛மிஸஸ் அன்ட் மிஸ்டர்' படம் நேற்று வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளில், மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் வனிதா. அவரின் சில பேச்சுகள் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை சென்னை, கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த வனிதாவிடம் ''உங்க படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி' பாடலை பயன்படுத்தக் கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்கிறாராமே? அவரிடம் அனுமதி வாங்கிவிட்டதாக நீங்க சொன்னீர்களே என்று நிருபர்கள் கேட்க, சற்றே எமோஷனல் ஆனார் வனிதா.
'தெய்வமே இப்படி செய்யலாமா? நாங்க அந்த பாடலுக்கு முறைப்படி அனுமதி வாங்கி இருக்கிறோம். அதாவது, சோனி மியூசிக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து அனுமதி வாங்கினோம். அவர்களுக்கும், இளையராஜா தரப்பும் இன்னும் பிரச்னை. இவர்களும் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்கள். நான் ஒரு வீடு வாங்குகிறேன். பில்டரிடம் பணம் கொடுக்கிறேன். அப்போது இன்னொருவர் இந்த மனை எங்களுடையது என வந்தால் என்ன செய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன். இதற்குமேல் பேச விரும்பவில்லை. நான் இளையராஜா வீட்டுக்கு மருமகள் ஆக வேண்டியது. அவர் மனைவி ஜீவா வீட்டின் பீரோ சாவியை என்னிடம் கொடுத்தார், நான் உரிமையுடன் நகையை எடுத்து அணிந்த காலம் உண்டு' என்றும் பொங்கினார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த பாடல் விவகாரத்தில் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக, இளையராஜாவை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார் வனிதா. இவ்வளவு நடந்ததும் இளையராஜா வழக்கு போட உள்ளார். என்ன பிரச்னை, ராஜா தரப்பில் விசாரித்தால், ''அந்த பாடல் விவகாரத்தில் வனிதா வந்து பேசினார். ஆனாலும், சோனிக்கும் அவர் தரப்புக்கும் சட்ட சிக்கல் நீடிக்கிறது. கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இவருக்காக விட்டால், மற்ற பாடல்களும் ரைட்ஸ் பிரச்னை வரும்.
இந்த படத்தின் போஸ்டர் பப்ளிசிட்டியில் இளையராஜா போட்டோ, பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த படம் ஒரு மாதிரியான அடல்ட் கன்டன்ட் படம், இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்ற தோற்றத்தை வனிதா உருவாக்கி உள்ளார். அதனால், அந்த பாடலை பயன்படுத்தக்கூடாது என்று சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆபாச படத்தில் ராஜா பாடல் இடம் பெறுவது சரியில்லை'' என்கிறார்கள்.
சரி, இளையராஜா வீட்டுக்கு மருமகள் என எந்த அர்த்தத்தில் வனிதா பேசினார் என்று விசாரித்தால், பலருக்கும் குழப்பம். இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என 2 மகன்கள். இதில் யாருக்கு அவரை திருமணம் செய்ய நினைத்தார்கள். யாருடன் காதல் இருந்தது அல்லது இளையராஜா குடும்பத்தில் யாருடனாவது வனிதாவை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்ததா? அப்போது என்ன நடந்தது என பலரும் துப்பறிந்து வருகிறார்கள்.