கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள ‛வாரிசு' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 11) ரிலீஸானது. குடும்ப படமாக வெளிவந்துள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை அடுத்து மீண்டும் தன்னை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தற்காலிகமாக விஜய் 67 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை கடந்தமாதம் சென்னையில் நடந்தது. தொடர்ந்து சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பும் நடந்தது.
லோகேஷின் ஸ்டைலில் கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகிறது. அதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இதனால் லோகேஷ் கனகராஜ் எங்கு வெளியில் சென்றாலும் அவரிடம் முன் வைக்கப்படும் ஒரு கேள்வி விஜய் 67 பற்றிய அப்டேட். ஆனால் எல்லா இடங்களிலும் அவர் மவுனமே காத்து வருகிறார். அதோடு வாரிசு படம் வெளியான பிறகே விஜய் 67 பற்றிய அறிவிப்பு வரும் என கூறி வந்தார்.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தை சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். பின்னர் வெளியே வந்த அவர், ‛‛வாரிசு படம் ரிலீஸிற்காகத் தான் இதுநாள் வரை காத்திருந்தோம். இனி விஜய் 67 படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும்'' என தெரிவித்துள்ளார்.