சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் நடித்துளள 'வாரிசு' படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படத்திற்கான ரசிகர்களின் சிறப்புக் காட்சிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அஜித் நடித்த 'துணிவு' படத்திற்கு அதற்கு முன்பாக நள்ளிரவு 1 மணிக்கு வழங்கப்பட்டு காட்சிகள் நடந்தன.
'வாரிசு' படத்திற்கு முன்பாக 'துணிவு' படத்திற்கு சிறப்புக் காட்சிகள் நடைபெற்றதால் 'துணிவு' படம் பற்றிய ரசிகர்களின் பாசிட்டிவ்வான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. அது 'வாரிசு' படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் கடும் வருத்தத்திற்கு ஆளாகினர்.
அதனால், இன்று காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பல டிரெண்டிங்குகளைச் செய்து வருகின்றனர். “தளபதி விஜய், வாரிசு பொங்கல் வின்னர், பிளாக் பஸ்டர் வாரிசு' ஆகிய டிரெண்டிங்குடன் ''#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்” என்ற டிரெண்டிங்கும் இடம் பெற்றுள்ளது. இந்த டிரெண்டிங்கில் இதுவரையில் 39 ஆயிரம் டுவீட்டுகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
படத்தில் விஜய் பேசும் ஒரு பன்ச் வசனம்தான் இந்த ''#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்”. நேற்று 'வாரிசு' காட்சிக்கு முன்பாக 'துணிவு' படத்திற்கு சிறப்பு அனுமதி கொடுத்ததால் அப்படத்தை வெளியிட்ட திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மீதான கோபத்தினால் இப்படி ஒரு டிரெண்டிங்கை செய்கிறார்களா என்ற சந்தேகம் அஜித் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.