டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி. அவர் 'கைதி' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸைக் காதலிப்பது பற்றி நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை 'ஹாட்டின்' எமோஜியுடன் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்ய லெட்சுமி. அர்ஜுன் தாஸ் எம்பிஏ படித்துள்ளவர், ஐஸ்வர்ய லெட்சுமி எம்பிபிஎஸ் படித்துள்ளவர். இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. அப்படியிருக்கும் போது இருவரும் எங்கு சந்தித்தார்கள், எப்போது காதலிக்க ஆரம்பித்தார்கள் என்பது தெரியவில்லை. இருவரில் யாராவது ஒருவர் அடுத்து பேட்டி அளிக்கும் போதுதான் தெரியும்.
பொதுவாக ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் போதுதான் சினிமா நட்சத்திரங்கள் காதலில் விழுவார்கள். ஆனால், சேர்ந்து நடிக்காமல் இருவரும் காதலிப்பது சினிமா உலகிலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.