ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் கடனட வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
மரகதமணியின் இசையில் உருவான இந்த பாடலுக்கு ராம்சரணும் ஜூனியர் என்டிஆரும் ஹூக் ஸ்டெப்ஸ் முறையில் அதிவிரைவு நடனம் ஆடியிருந்தார்கள். இந்த நடனத்தை ஹாலிவுட்டில் உள்ள சில நடிகர்களும் பல கிரிக்கெட் வீரர்களும் கூட ஆட முயற்சித்து அதை வீடியோக்களாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்கள் என்பதும் ஆச்சர்யமான ஒன்று..
இந்த நிலையில் இந்த பாடலுக்கு கோல்டன் குளோப் குரூப் விருது கிடைத்ததை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் ராம்சரண் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதும் கிடைத்துவிட்டால் இந்த நாட்டுக்கூத்து பாடலுக்கு தொடர்ந்து 17 முறை நடனமாட தயாராக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எதற்காக 17 முறை என்று அவர் குறிப்பிடுகிறார் என்றால், இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட 100 விதமான வித்தியாசமான நடன அசைவுகள் முயற்சித்து பார்க்கப்பட்டன. அதில் தற்போது பாடலில் இடம்பெற்றுள்ள அந்த நடன அசைவுகளுக்காக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் 17 முறை ரிகர்சல் எடுத்துக்கொண்ட பின்னரே அந்த காட்சி படமாக்கப்பட்டது. அதை குறிப்பிடும் விதமாகவே மீண்டும் 17 முறை தான் நடனமாட தயார் என்று கூறியுள்ளார் ராம்சரண்.