மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் கஸ்டடி. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்கள். நாக சைதன்யா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் கிருத்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத், சரத்குமார், பிரேம்ஜி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் நாயகி கிருத்தி ஷெட்டியின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரேவதி என்ற தைரியமான மற்றும் தன்னலமற்ற கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் மே 12ம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.