துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படம் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே கடந்த ஜனவரி 8ம் தேதி மாலை டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது. அப்படம் டிவி ரேட்டிங்கில் 16.4 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை டிவியில் முதல் முறை ஒளிபரப்பான படங்களின் ரேட்டிங்கில் 5ம் இடத்தைப் பிடித்துள்ளது.
அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் 18.4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' 17.6 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' 17.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், சிவகார்த்திகேயன் நடித்த 'சீம ராஜா' 16.7 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளது. அந்தப் படங்களின் சாதனையை முறியடித்து 'பொன்னியின் செல்வன்' முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐந்தாம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
ஓடிடி தளத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பலரும் பார்த்துவிட்டதால் இந்த டிவி ரேட்டிங் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. ஓடிடி தளங்கள் தற்போது வளர்ந்துவிட்ட நிலையில், இனி வரும் காலங்களில் டிவி ரேட்டிங்கில் எந்தப் படம் மேலே உள்ள ஐந்து இடங்களைத் தாண்டி ரேட்டிங் பெற்றாலும் அது பெரிய சாதனைதான்.