சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய்யின் 66வது படமான 'வாரிசு' இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து 250 கோடி வசூலையும் கடந்துவிட்டது. அப்படம் வெளியான உடனேயே விஜய்யின் 67வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் இணையும் படம். அப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. அதனால், லோகேஷ், விஜய் மீண்டும் இணையும் விஜய் 67 படம் அந்த அளவுக்கு வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
'வாரிசு' படத்தின் கொண்டாட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வரும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது. அடுத்து விஜய் 67 கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் அடிக்கடி 'தளபதி 67' என்பதை டிரெண்டிங்கில் கொண்டு வருகிறார்கள்.
'விஜய் 67' பட அறிவிப்பு 'விக்ரம்' பட அறிவிப்பு போலவே ஒரு அறிமுக வீடியோ டீசருடன் வெளியாக உள்ளது. கூடிய விரைவில் அது வரலாம் என்கிறார்கள்.