போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, யோகி பாபு உட்பட பலர் நடிக்க, மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த ஜெயிலர் படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது ஏப்ரல் 28ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வருவதால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஜெயிலர் படக் குழு இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாததால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.