துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கிட்டத்தட்ட 70 வயதை தொட்டுள்ள நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகில் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னை ஒப்படைத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் கூட ஒரு எளிய கிராமத்து மனிதனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதே சமயம் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான காதல் ; தி கோர் என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்கிற அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.