துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காந்தாரா படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்கிற பிரிவில் 2023 ஆம் வருடத்தின் தாதா சாஹிப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியவை இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதை பெற இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
கடந்த வருடம் கன்னடத்தில் வழக்கமான ஒரு சாதாரண படம் என்கிற அளவிலேயே வெளியான காந்தாரா திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியிலும் கூட இதே போன்ற வரவேற்பு காந்தாராவுக்கு கிடைத்தது. கடவுள் மீது மக்கள் கொண்டுள்ள பக்தி, நம்பிக்கை, அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்த ரிஷப் ஷெட்டி அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். அதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.