துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'இந்தியன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தற்போது இப்படத்தின் படப்படிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் ப்ரீயட் பகுதி படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் 90 வயது கமல்ஹாசனுக்கு ஜோடியாக வயதான பாட்டி கெட்டப்பில் காஜல் அகர்வால் நடித்து வருகிறாராம். அதற்காக மூன்றரை மணி நேரம் வரை தினமும் காஜல் அகர்வால் மேக்கப் போடுகிறாராம். அவரின் தோற்றம் நம்ப முடியாத அளவிற்கு இருக்குமென கூறுகிறார்கள்.