தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாராகி உள்ள கப்ஜா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா. உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது ஸ்ரேயாவும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛கப்ஜா படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ஷங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த போது சினிமா குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார். தன்னுடைய வெற்றியை எப்போதும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பதை அவரைப் பார்த்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றார் ஸ்ரேயா.