துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் நிறைய படங்கள் இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளது. ஆனால், இந்த 2023ம் வருடத்தில் நிறைய இரண்டாம் பாகப் படங்கள் வெளியாக உள்ளன.
அதை முதலில் 'பொன்னியின் செல்வன் 2' படம் ஆரம்பித்து வைக்க உள்ளது. இப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு, “பிச்சைக்காரன் 2, சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, சார்பட்டா பரம்பரை 2, விடுதலை 2, இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, தலைநகரம் 2,” என பல படங்கள் வெளியாக உள்ளன.
இதற்கு முன்பு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நிறைய இரண்டாம் பாகப் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில இரண்டாம் பாகப் படங்களையும் தயாரிக்க விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அவற்றிற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகலாம்.
இந்த வருடம் வெளியாக உள்ள இரண்டாம் பாகப் படங்கள் அனைத்துமே, முதல் பாகப் படமாக வெளிவந்த போது பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. வேறு எந்தத் திரையுலகத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகப் படங்கள் வருவது ஆச்சரியம்தான்.