தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏப்ரல் மாதம் முக்கியமான ஒரு மாதமாக அமையப் போகிறது. ஏப்ரல் 14ம் தேதி தெலுங்கில் தயாரான 'சாகுந்தலம்' படமும், ஏப்ரல் 28ம் தேதி தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன் 2' படமும் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
'சாகுந்தலம்' படத்தில் சாகுந்தலை என்ற சரித்திரக் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை என்ற சரித்திரக் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்கள்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் இருந்த முக்கியத்துவத்தை விட இரண்டாம் கதாபாத்திரத்தில் குந்தவை கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா முதல் முறையாக சரித்திரக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள படம் இது. அது போலவே 'சாகுந்தலம்' படத்தின் மூலம் முதல் முறையாக சரித்திரக் கதாபாத்திரத்தில் சடித்துள்ளார் சமந்தா.
இருவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு அதிக லைக்குகளைப் பிடித்துள்ளன. அடுத்த மாதம் அவர்களது படங்கள் வரும் போது ஒப்பீடு செய்யப்பட்டு நிறைய கமெண்ட்டுகள் வர வாய்ப்புண்டு.