தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
‛பொன்னியின் செல்வன்' படத்தின் முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இரண்டாம பாகம் ஏப்., 28ல் ரிலீஸாக உள்ளது. முதல்பாகத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட அதே நடிகர்களும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் தொடருகின்றனர். மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் அக நக என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நாளை மறுதினம்(மார்ச் 29) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது. முதல்பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இரண்டாகம்பாக இசை வெளியீட்டு விழாவில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். விழாவில் ரஹ்மான் நேரலை இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக அளவில் உள்ளது.