மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி | தேனீ வாயில் புகுந்ததால் கரிஷ்மா முன்னாள் கணவர் மரணம்? | ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி | புலவர் பெருந்தலை சாத்தனாராக நடித்த கொட்டாச்சி | விஜயகாந்த் மகனுக்கு விஜய், லாரன்ஸ் உதவினார்களா? | ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா | இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து | தக் லைப் : ஓடிடி விலை, மறுபரிசீலனை பேச்சுவார்த்தை? | நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் |
குறைவான நட்சத்திரங்கள், ஒரு பழைய வீடு, அதில் ஒரு பேய், அந்த பேய்க்கு ஒரு பிளாஷ் பேக், ஒரு பாதிரியார் வந்து பேய் விரட்டுவார். இதுதான் ஹாலிவுட் பேய் படங்களுக்கான டெம்பிளேட் கதை. தி எக்ஸ்சார்சிஸ்ட், கான்ஜூரிங், நன் இப்படியான படங்கள் இப்படித்தான் வந்தது. இப்போது அதே பாணியில் வருகிற படம் 'தி போப்ஸ் எக்ஸ்சார்சிஸ்ட்'.
இந்த படத்தில் ரசல் குரோவ் போப் கேப்ரியல் அமோர்த்தாக நடித்துள்ளார். இவர்கள் தவிர டேனியல் சோவாட்டோ, அலெக்ஸ் எஸ்ஸோ, பிராங்க் நீரோ உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அமோர்த் என்ற பாதிரியாருக்கு நடந்த நிஜமான நிகழ்வுகளை கொண்டது. அவர் எழுதிய குறிப்புகளை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. ஜூலியஸ் அவேரி இயக்கி உள்ளார்.
சோனி பிக்சர்ஸ் வெளியிடும் இந்த படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. முன்னதாக ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.