தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் |
வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். நேற்று வெளியான இதன் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே சூரியின் நடிப்பை எந்தவித குறையும் சொல்லாமல் மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் எந்த இடத்திலும் ஒரு நகைச்சுவை நடிகராகவே அவரை பார்க்கவே முடியவில்லை என்று பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்த பிரேமம் புகழ் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும், சூரியின் நடிப்பை சிலாகித்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது சூரியின் மாற்றம் அல்ல.. பரிணாமம்.. சூரியை நம்பி அவரை இந்த விதமாக மாற்றுவதற்கு அழகான பாதை அமைத்துக் கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. சேதுண்ணா (விஜய்சேதுபதி) நீங்க இல்லாம தமிழ் சினிமா முன்னாடி போகாத மாதிரி உங்கள உருவாக்குனதுக்கு ஒரு சல்யூட்” என்று வெற்றிமாறன் மற்றும் விஜய்சேதுபதிக்கும் சேர்த்தே தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.