இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் முல்லை கேரக்டரில் நடிப்பவர்கள் சினிமாவில் ஹீரோயின் ஆகிவிடுகிறார்கள். தற்போது நடித்து வரும் லாவண்யா, ரேசர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் நடித்த காவ்யா அறிவுமணி 'ரிப்பப்பரி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் நாயகனாக மகேந்திரன் நடித்தாலும் காவ்யா அவருக்கு ஜோடி இல்லை. ஆனால் படத்தின் நாயகி அவர்தான். மகேந்திரன் ஜோடியாக மலையாள நடிகை ஆர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர யு-டியூபர் மாரி, நோபல் ஜேம்ஸ், செல்லா மற்றும் தனம் ஆகியோர் நடிக்கின்றனர். சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், திவாகராஜன் இசை அமைக்கிறார். அருண் கார்த்திக் இயக்குகிறார்.
“படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இந்த படத்தில் வரும் பேய்க்கு ஜாதி வெறி. தன் ஜாதியை சேர்ந்த பெண்ணோ, ஆணோ வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொண்டால் தீர்த்து கட்டிவிடும். அந்த பேயை கண்டுபிடித்து நண்பர்கள் எப்படி திருத்துகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம்” என்கிறார் இயக்குனர் அருண் கார்த்திக்.