துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நாட்டுப்புற மற்றும் சினிமா பின்னணி பாடகியான ரமணி அம்மாள்(63) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் இடம் பெற்ற 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். போதிய வாய்ப்பு இல்லாததால் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்தார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த இவர் 2017ல் ஜீ தமிழில் ஒளிபரப்பான ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரலாமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் "ராக்ஸ்டார்" ரமணி அம்மாளாக வலம் வந்த இவர் ‛ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' உள்ளிட்ட படங்களில் பாடி உள்ளார். மேலும் பல வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடி உள்ளார்.
ரமணி அம்மாள் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலர் சமூக வலைத்தளம் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.