2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு தமிழ் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துக் கொண்டே இந்த வருடம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தையும் தயாரித்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பையும் வசூலையும் கொடுக்கவில்லை. இருந்தாலும் விட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை அவர் தயாரிக்க இருப்பதாக தற்போது தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய இயக்குனர் பாபி தான் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அதை தொடர்ந்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
தெலுங்கு திரையரங்கில் இருந்து வெளியான தகவல்களின்படி ஞானவேல் படத்திலும் தில் ராஜு தயாரிக்கும் படத்திலும் ஒரே சமயத்தில் மாறிமாறி அவர் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..