மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
யஷ் நாயகனாக நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப்., முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் 2ம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை படக்குழு நினைவு கூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1978 - 81 வரை ராக்கி எங்கே இருந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனால் கேஜிஎப் 3 பட கதை 1978-81 காலக்கட்டங்களில் நடக்கும் படமாக உருவாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கே.ஜி.எப்., ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தற்போது 3ம் பாகத்திற்கான திரைக்கதைப்பணியில் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ளார். தற்போது பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த பட பணிகள் முடிந்ததும் கே.ஜி.எப் 3 பட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.