பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 |

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் நாளை(ஏப்.,28) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. பொதுவாக எந்த ஒரு பெரிய படம் வெளியானாலும் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளை ஆரம்பிப்பார்கள். அடுத்து காலை 8 மணிக்கும் மற்றொரு சிறப்புக் காட்சி நடக்கும்.
பொங்கலுக்கு வெளியான 'துணிவு' படத்திற்கு அதிகாலை காட்சிகளும், 'வாரிசு' படத்திற்கு 8 மணி காட்சிகளும் நடைபெற்றன. ஆனால், அனுமதி பெறாமலேயே அந்தக் காட்சிகளை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் கண்டிப்பாக அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், தமிழகத்தில் எந்த ஒரு தியேட்டரிலாவது அனுமதியின்றி அதிகாலை காட்சிகளை நடத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி முதல்தான் நாளை இப்படத்தின் காட்சிகள் ஆரம்பமாகின்றன. அதே சமயம் பக்கத்து மாநிலத் தலைநகரான பெங்களூருவில் காலை 6 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகின்றன. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் இல்லாததால் அது படத்தின் முதல் நாள் வசூலைக் குறைத்துவிடும்.