‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

பிரிக்கமுடியாதது எது என்றால் அஜித்தும் பைக் பயணம் என்று சொல்லும் அளவுக்கு நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸ் பிரியர் என்பது ஊரறிந்த விஷயம்.. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனியாகவோ அல்லது தனது சக நண்பர்களுடன் சேர்ந்தோ பைக்கை எடுத்துக்கொண்டு ஜாலியாக சில ஆயிரம் மைல்கள் பயணம் கிளம்பி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் அஜித்.
அந்தவகையில் கடந்த வருடம் துணிவு படத்தில் நடித்து வந்த சமயத்தில் வட மாநிலங்களில் அந்த படப்பிடிப்பு நடைபெற்றபோது, படப்பிடிப்பை முடித்துவிட்டு காஷ்மீர், லடாக், ஹிமாலயா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் 16 பேர் கொண்ட அவரது பைக் நண்பர்கள் கூட்டணியுடன் சேர்ந்து பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித். இந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் கூட கலந்து கொண்டார்.
அதுமட்டுமல்ல இந்த பயணத்தின் போது துணிவு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நீரவ் ஷாவும் கலந்து கொண்டார். காரணம் அஜித்தின் அந்த பைக் பயணத்தை முழுவதுமாக ஒளிப்பதிவு செய்து அதன் முக்கிய தருணங்களை ஒரு டாக்குமெண்டரி படமாக மாற்றி அஜித் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளாராம் நீரவ் ஷா. இந்த டாக்குமெண்டரி படம் பொதுவெளிக்கு வராது என்றாலும் அஜித்தின் குடும்பத்தினர் இதை காலத்திற்கும் பாதுகாத்து வைக்கும் ஒரு ஆவணப்படமாக உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்ததால் அதை நிறைவேற்றிக் கொடுத்தாராம் நீரவ் ஷா.