துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஜூன் மாதம் இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு மாவீரன் படத்தை வெளியிட முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தான் நடித்துள்ள மாமன்னன் படத்தை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின், பின்னர் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு மாற்றினார். அது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். இதன் காரணமாக மீண்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதாம். அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட இருந்தவர்கள் அதற்கு முன்பே அதாவது ஜூலை மாதத்திலேயே அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பிற்கு பின் மாவீரன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.