பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
'கன்டென்ட்', சினிமாவில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. 'கன்டென்ட் இல்லைங்க, கன்டென்ட் சரியில்லங்க, கன்டென்ட்டே இல்லைங்க' என்ற கமெண்ட்டுகளுடன்தான் தற்போது வெளிவரும் படங்கள் இருக்கின்றன. ஆனால், அடுத்த வாரம் மே 12ம் தேதி வெளிவர இருக்கும் படங்கள் 'கன்டெட்' கொண்ட படங்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அந்த படங்கள் ஏற்படுத்தியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் 'கஸ்டடி' படம் வெளியாக உள்ளது. வில்லனை சாகாமல் காப்பாற்றப் போராடும் நாயகனின் கதை கொண்ட படம் இது.
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி மற்றும் பலர் நடிக்கும் 'இராவண கோட்டம்' படத்தில், மக்களை ஏமாற்றிய கருவேல அரசியலை மையப்படுத்தி, காதலையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'பர்ஹானா' படம், தனது குழந்தைகளுக்காக வேலைக்குச் செல்லும் ஒரு முஸ்லிம் குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக வர உள்ளது.
குறட்டை விடும் குறை கொண்ட நாயகனின் பிரச்சினையை நகைச்சுவை கலந்து சொல்லும் படமாக மணிகண்டன், மீதா ரகுநாத் மற்றும் பலர் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ள 'குட் நைட்' படம் மே 12 அன்று வெளியாக உள்ளது.
இந்தப் படங்களில் எந்தப் படத்தில் உண்மையாகவே 'கன்டென்ட்' சிறப்பாக உள்ளது என்பதைப் பார்க்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். பட்டியலில் மேலும் சில படங்கள் சேர்ந்தாலும் சேரலாம்.