ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன். 2008ம் ஆண்டு வெளியான ‛டிஎன்.07 4777' படத்தில் இடம்பெற்ற ‛சொர்க்கம் மதுவிலே' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு ‛வேட்டைக்காரன்' படத்தில் ‛என் உச்சி மண்டையில சுர்ருங்குது', ‛நான்' படத்தில் ‛மக்காயாலா', ‛கடல்' படத்தில் ‛நெஞ்சுக்குள்ளே..' உள்பட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். சில படங்களில் டப்பிங்கும் பேசி உள்ளார். இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
'தமிழ்ப் படம்', 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று' 'மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த எஸ்.சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.