உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

'மாடர்ன் லவ்' என்கிற வெப் தொடர் உலக புகழ்பெற்றது. இந்த தொடரின் நீட்சியாக பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இது தமிழிலும் தயாராகிறது. இந்த தொடரில் இடம்பெறும் அந்தாலஜி கதைகளை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இயக்குகிறார்கள். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் இசை அமைக்கிறார்கள். இதில் 6 கதைகள் இடம் பெறுகிறது. அதன் விபரம் வருமாறு:
1. லாலாகுண்டா பொம்மைகள்: ராஜுமுருகன் இயக்கியது, இசையமைப்பு ஷான் ரோல்டன், ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.
2. இமைகள்: பாலாஜி சக்திவேல் இயக்கியது, இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா, அசோக் செல்வன், மற்றும் டீ.ஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர்.
3. காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி: கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியது, இசையமைப்பு ஜி.வி.பிரகாஷ் குமார், ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
4. மார்கழி: அக்ஷய் சுந்தர் இயக்கியது, இசையமைப்பு இளையராஜா, சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
5. பறவை கூட்டில் வாழும் மான்கள்: பாரதிராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா, கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.
6. நினைவோ ஒரு பறவை: தியாகராஜன் குமாரராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா, வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர்
இந்த அந்தாலஜி தொடர் வருகிற 18ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.