திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் அப்படி இல்லை என்றாலும் 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் எங்கள் மெட்டு என்று இந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் வசிபுதீன் தாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இயக்குனர் மணிரத்னத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய நோட்டீசில், இந்த பாடலை தனது குடும்பத்தினர் 'அதன' ராகத்தில் உருவாக்கி இருந்தார்கள். 1978ம் ஆண்டு இந்த பாடலை ஹாலந்தில் நடந் இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்கள். எங்கள் குடும்பத்தின் அனுமதி பெறாமல் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தி உள்ளார். என்று குறிப்பிட்டுள்ளர்.
இதற்கு மணிரத்னம் சார்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், 'வீரா ராஜ வீரா' பாடல் 13-ம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையைத் தழுவி எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் பொதுவானது. மேலும், இப்பாடல் 'த்ருபத்' இசைப்பாணியில் இயற்றப்பட்டது. விளம்பர, லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வசிபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.