இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக தயாராகி வரும் திரைப்படம் மாமன்னன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் லால், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் ஸ்பெஷல் கெஸ்டாக அழைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.