நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், ‛சீதா ராமம்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். சமூகவலைதளத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். உலகளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் இவர் பங்கேற்க உள்ளார்.
இந்த விழாவில் பன்னாட்டு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பர். அதோடு அவர்கள் அணிந்து வரும் கண்கவர் ஆடைகளும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் இதற்கு முன் பங்கேற்றுள்ளனர். இந்தாண்டு நடக்கும் விழாவில் மிருணாள் தாக்கூர் பங்கேற்கிறார்.
இதுபற்றி மிருணாள் கூறுகையில், ‛‛மிகவும் திரில்லாக உள்ளது. என் திரைவாழ்வுக்கு கிடைத்த பெருமையாக இதை கருதுகிறேன். பல சர்வதேச திரைக்கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெறுவேன்'' என்றார்.