நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
இயக்குனர் பாரதிராஜா தனது திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு 'ஆர்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைத்துள்ளார், அவர்கள் பிற்காலத்தில் பெரிய நடிகைகளாக வளர்ந்தார்கள். அந்த வரிசையில் தற்போது அவரது மகன் மனோஜ் இயக்கும் 'மார்கழி திங்கள்' என்ற படத்திற்கு தேர்வாகி உள்ள புதுமுகத்திற்கு 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டி உள்ளார். இந்த படத்தை சுசீந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் மூலம் என் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் நாயகியை மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இந்த கதையின் நாயகிக்கு ராதிகா, ராதா, ரேவதி, ரேகா போன்று ஆர் வரிசையில் 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டுகிறேன். இவர் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.