தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை:ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவரது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும் நடிகை வசந்தா. இன்று(19 ம் தேதி) மாலை 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். 82 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், 'இரவும் பகலும்' படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் , 'கார்த்திகை தீபம்' படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். 'மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, 'ராணுவ வீரன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார்.
மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். திரை உலகை சேர்ந்தவர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளும் இவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை (மே-20) பிற்பகல் 1:30 மணி அளவில் இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.