மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அந்த கிராமத்தில் எந்த அனுமதியும் பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டதாக அரிட்டாபட்டி பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர். இதற்கு முன்பு தென்காசியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் விதமாக குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படப்பிடிப்பை கலெக்டர் நிறுத்தினர். இப்போது மீண்டும் அதுபோன்று ஒரு சர்ச்சையில் கேப்டன் மில்லர் படக்குழு சிக்கி உள்ளனர்.