துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென்று லைகா நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டதால் திட்டமிட்டபடி விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை தாமதமாகும் என்கிற தகவல்களும் வெளியாகின. ஆனபோதும் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி இந்த வாரத்தில் தொடங்குகிறது.
இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்காக அஜித்தும், மகிழ்திருமேனியும் லண்டனுக்கு சென்று தற்போது சென்னை திரும்பி விட்டார்கள். அங்கு அஜித்தின் புதிய கெட்டப்புக்கான போட்டோ சூட் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்க உள்ளது . இதற்காக அங்கு ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்பில் வில்லன்களுடன் அஜித் மோதும் அதிரடியான சண்டை காட்சி படமாக உள்ளது.
அஜித்தின் கடந்த சில படங்களில் ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறாமல் ஆக்சனுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ஆக்சனுக்கு இணையாக ரொமான்டிக் காட்சிகளும் இடம் பெறுகிறதாம். தற்போது தொடங்கப்படும் படப்பிடிப்பை இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார் மகிழ்திருமேனி.