துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் திலீப் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ராம்லீலா. இந்த படத்தின் இயக்குனர் அருண்கோபி, மீண்டும் திலீப்பை வைத்து தற்போது இயக்கி வரும் படம் பாந்த்ரா. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முறையாக மலையாளத் திரையுலகில் நுழைந்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ராம்லீலா படத்திலும் திலீப்பின் அம்மாவாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா தற்போது இந்த படத்திலும் அதே கூட்டணியுடன் தொடர்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் கேரளாவிலும் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் அதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்றிருந்த சரத்குமார் அப்படியே படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் திலீப்பின் வீட்டிற்கும் மனைவி ராதிகாவுடன் விசிட் அடித்துள்ளார்.
அவர்களை வரவேற்ற திலீப் அவரது மனைவி காவ்யா மாதவன் தம்பதியினருடன் அந்த சமயத்தில் ஜாலியாக எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை நடிகை ராதிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னதாக மலையாளத்தில் வெளியான கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்கிற படத்தில் திலீப் காவ்யா மாதவன் இருவருடனும் இணைந்து சரத்குமார் நடித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.