ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். “குச் கச் ஹோதா ஹை” படம் மூலம் 1998ல் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 'ஏ தில் பை முஷ்கில்'. அப்படம் 2016ம் ஆண்டில் வெளிவந்தது.
அதற்குப் பிறகு 'லஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் தொடரின் ஒரு பகுதியையும், 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் தொடரின் ஒரு பகுதியையும் மட்டும் இயக்கினார். திரைப்படங்கள் எதையும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கி வரும் படம் 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி'. இப்படத்தில் தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் டீசரின் முதல் பாதியில் ரன்வீர் சிங், ஆலியா பட்டும், அடுத்த பாதியில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் இடம் பெறும் விதத்திலும் டீசர் உள்ளது. கரண் ஜோஹரின் வழக்கமான பிரமாண்டம், அவரது படங்களில் பார்த்த இசை இடம் பெற்றுள்ளது. காதலும், குடும்ப உறவுகளும் கலந்த கதையாக இருக்கும் இப்படம் ஜுலை 28ம் தேதியன்று வெளியாக உள்ளது.