பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பாலாம்பிகா. இவர் பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பரின் மகள். இவர் ‛பாலம்' என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். இப்படத்தில் கண் பார்வை தெரியாத தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு ‛நடிகன்' படத்தில் குஷ்புவுக்கு தங்கையாக நடித்தார். ‛பாட்டுக்கு ஒரு தலைவன்' என்ற படத்தில் விஜயகாந்த் தங்கையாகவும், ‛திருமதி பழனிச்சாமி' என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.
பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலாம்பிகா, பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‛‛அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கும் இதில் உடன்பாடில்லை. இப்படி சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு நமக்கு தேவையில்லை என அப்பா சொல்லிவிட்டார். விஜய் உடன் நான் நடித்திருந்தால் தற்போது என் வாழ்க்கை மாறியிருக்கும்.
எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. கணவர் சரியில்லை. அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டேன். நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன். நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன். அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். விஜயகாந்தை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.
பாலாம்பிகாவின் இந்த பேட்டி, தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.