டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் பார்த்திபன். ஆனால் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அவரது அண்ணனான பெரிய பழுவேட்டரையரான சரத்குமாருக்கு மனைவியாக ஜோடியாக நடித்திருந்தார். இருந்தாலும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்ததே மகிழ்ச்சி என அப்போது தனது திருப்தியை வெளிப்படுத்தினார் பார்த்திபன்.
அதேசமயம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பார்த்திபனை தேடி வந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இந்த தகவல் சமீபத்தில் மம்முட்டியை பாராட்டி பார்த்திபன் வெளியிட்ட எக்ஸ் பதிவின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. அந்த படம் தான் 2000ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். பார்த்திபன் நடிக்க முடியாமல் போன கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மம்முட்டி (அதில் மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்).
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான களம் காவல் படத்தில் அவர் வில்லனாக நடித்ததை பாராட்டி தான் வெளியிட்ட பதிவில், எனக்கு மம்முட்டியை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பார்த்திபன், “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தில் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து ஏதோ சில காரணத்தால், நான் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு மிகவும் மரியாதைக்குரிய மம்முட்டி நடித்தார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என் நலம் மனநிலையும்.. அதேபோல அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் என் பிரார்த்தனைக்கும் பதில் என நினைத்தேன்.. ஒரு முழுமையான ஹீரோவான அவர் (நிஜ வாழ்க்கையிலும் கூட) வில்லனாக நடித்தால் கொன்னு குழி பறிச்சுடுவாரு” என்று தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.