டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஒரு தேதியில் படங்களை அறிவிப்பதும் பின்னர் திடீரென தள்ளி வைப்பதும், அதன்பிறகும் அந்தப் படங்கள் கடைசி நேரத்தில் வெளிவராமல் போவதும் கடந்த சில வருடங்களாக மட்டுமல்ல பல வருடங்களாகவே நடந்து வருகிறது. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அப்படியான சிக்கல் வருவது ஒட்டுமொத்த வியாபார அமைப்பையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.
இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய படங்கள் 'வா வாத்தியார், லாக் டவுன்'. இந்த இரண்டு படங்களுமே வெளியீட்டிற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் படங்கள். ஓரிரு முறை வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படங்கள். 'வா வாத்தியார்' படத்திற்கு நீதிமன்ற இடைக்காலத் தடை நீக்கப்பட்டால் மட்டுமே இந்த வாரம் வெளியாகும். இருந்தாலும் தடையை நீக்கும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகத் தகவல்.
இந்தப் படங்கள் தவிர இந்த வார வெளியீடாக, “மகாசேனா, சல்லியர்கள், யாரு போட்ட கோடு” ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.