பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
அப்பா டாக்கீஸ் சார்பில் எச்.பாட்சா தயாரித்துள்ள படம் “நேற்று நான் இன்று நீ". திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும். பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார். புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா இவர்களுடன் ஆர்.அரவிந்தராஜ், பிஜாய் மேனன், தயாரிப்பாளர் பாட்சா நடிக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்கிறார், கல்யாண் இசை அமைக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் எச்.பாட்சா கூறியதாவது: குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில், நல்ல கதையையும் நடிக நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்த படம் தயாராகிறது. சுவாரசியமான கதை களத்தோடு திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகிறது. அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை மீட்க வந்த நாயகி எதிர்கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும், தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட படம் இது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. என்றார்.