பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'லியோ'. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' வெளியாக உள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பனிமலை பின்னணியில் விஜய் ஆவேசத்துடன் சுத்தியலால் யாரையோ அடித்துத் தாக்குவது போலவும், பின்னாடி ஓநாய் ஒன்றும் கடும் கோபத்துடன் இருக்க, சுத்தியலிலிருந்து ரத்தம் தெறிக்க, யாரோ ஒருவரது கைவிரல்கள் ஒரு ஓரத்தில் இருக்க, அடி வாங்கிய அந்த யாரோ ஒருவரது இரண்டு பற்கள் பறக்க போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் உள்ள டிசைன், அமெரிக்க வெப் தொடரான 'கேம் ஆப் த்ரோன்ஸ்'--ல் உள்ள ஜான் ஸ்னோ என்ற கதாபாத்திரத்தின் போஸ்டர் டிசைன் போல உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அக்கதாபாத்திரத்தில் கிட் ஹாரிங்டன் என்பவர் நடித்துள்ளார். அந்த போஸ்டரில் கத்தி ஒன்றுடன் அவர் நிற்க, கூடவே ஓநாய் ஒன்றும் இருப்பதால் இந்த ஒப்பீட்டை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.