ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தனது தனது பிரம்மாண்ட படைப்புகளால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை திரையுலகினரையும் சரி ரசிகர்களையும் சரி பிரமிக்க வைக்கும் விதமாக படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்று பெருமை சேர்த்தது.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்று திரும்பும் வரை பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார் ராஜமவுலி. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்த இடமான தூத்துக்குடிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்து சென்றுள்ளார் ராஜமவுலி. அவரது மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, மருமகள் பூஜா, மகள் மயூரா உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சில நாட்கள் தங்கி இந்த சுற்றுலாவை அனுபவித்துள்ளார் ராஜமவுலி.
அங்கே தங்கி இருந்தபோது இந்த ரிசார்ட்டில் தான் வந்து சென்றதன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்துள்ளார் ராஜமவுலி. அங்கே தங்கி இருந்தபோது அவர்களை உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தத்த அனைனா மேத்யூ என்கிற பெண் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு, “ராஜமவுலி சாரின் குடும்பத்திற்கு விருந்தோம்பல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.