பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், இதையடுத்து வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‛ரைஸ் டு ரூல்' என்ற வாசகத்துடன் இப்படத்திற்காக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்த படம் அரசியல் சார்ந்த கதையில் உருவாக இருப்பதாக கூறப்பட்டதோடு, விவசாய சங்க தலைவர்களை வரவழைத்து அவர்களுடன் கமலும்-எச்.வினோத்தும் ஆலோசனை நடத்தியதால் , இந்த படம் விவசாய அரசியலை பேசப்போகிறது என்கிற கருத்துக்களும் எழுந்தன.
இப்படியான நிலையில், தற்போது இந்த படம் நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 170க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டு எடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த 2018ல் அவர் காலமானார். அதனால் நெல்லின் பெருமைகளை பற்றி எடுத்துரைக்கவும், நெல் ஜெயராமனின் வாழ்க்கை பயணத்தை மக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்தும் நோக்கத்திலும் இந்த படத்தை அவரது வாழ்க்கை வரலாறு கதையில் எடுப்பதற்கு கமல்ஹாசனும், எச்.வினோத்தும் திட்டமிட்டு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.